5 நாட்களில் 15% சரிவு.. இன்போசிஸ் நிறுவனப் பங்குகளின் பரிதாப நிலை..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் கடந்த சில நாட்களில் 15 சதவீதம் வரை சரிந்துள்ளது. இதற்கு என்ன காரணம்?

பொதுவாகச் சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் மதிப்புதக்க முதலீடாகப் பார்க்கப்படும் இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் ஒரு மாதத்திற்கு முன்பு 1200 என்ற உச்ச விலை எட்டி, அக்டோபர் 12ஆம் தேதி 1,219 ரூபாயாக உயர்ந்தது.

அதன் பின் இந்நிறுவனப் பங்குகள் மளமளவென 15 சதவீதம் சரிந்து 1,038 ரூபாயாகக் குறைந்ததுள்ளது.

என்ன தான் பிரச்சனை?

என்ன தான் பிரச்சனை?

அமெரிக்க அரசின் ஹெச்1-பி விசா வழங்குவதில் சில புதிய கட்டுப்பாடுகள் அறிவித்ததுள்ளது. இதில் இன்போசிஸ் நிறுவனம் மட்டும் அல்லாது இந்திய ஐடி நிறுவனங்கள் அனைத்தும் பாதித்துள்ளது.

இதுவே இன்போசிஸ் நிறுவனத்திற்கு முதல் அடியாக அமைந்தது.

 

ஹெச்1-பி விசா கட்டுப்பாடுகள்

ஹெச்1-பி விசா கட்டுப்பாடுகள்

சமீபத்தில் அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கையில், இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் ஹெச்1-பி விசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த திட்டமிட்டே இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதில் 50க்கும் மேற்பட்ட ஹெச்1-பி விசாக்கள் வழங்கப்பட்ட அனைத்து இந்திய ஐடி நிறுவனங்களுக்கும் அமெரிக்க அரசின் புதிய கட்டுப்பாடுகள் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது. இதனால் இனி இந்தியா நிறுவனங்கள் ஹெச்1பி விசா பெறுவதில் கடுமையான சூழ்நிலை உருவாகும்.

 

விசா முறைகேடு
 

விசா முறைகேடு

மேலும் முறைகேடாக விசா பெற்று இந்திய ஊழியர்களை அமெரிக்க நிறுவன பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தொழிலாளர் துறை டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ளது.

பணி நீக்கம்

பணி நீக்கம்

வால்ட் டிஸ்னி மற்றும் எடிசன் நிறுவனத்தின் பல அமெரிக்க ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து விட்டு டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் நிறுவனத்தின் வாயிலாக இந்திய ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இதன் காரணமாகவே அமெரிக்கத் தொழிலாளர் துறை இந்திய நிறுவனங்களின் மீது வழக்குத் தொடுத்துள்ளது.

காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

மேலும் 2015ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தில் குறைவான வளர்ச்சியின் காரணமாக நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் அதிகளவில் குறையும் என இன்போசிஸ் அறிவித்துள்ளது.

மேலும் இந்நிறுவனம் 4வது காலாண்டில் இதன் நிலை கண்டிப்பாக மாறும் எனவும் தனது செய்தி அறிக்கையில் இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

இதன் பின்னரே மும்பை பங்குச்சந்தையில் இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் தொடர்ந்து சரிய துவங்கியுள்ளது.

 

விசா பிரச்சனை

விசா பிரச்சனை

அமெரிக்க நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் இந்திய ஐடி நிறுவனங்களுக்குச் சாதகமாக அமைந்தால் இன்போசிஸ் மற்றும் பிற இந்திய ஐடி நிறுவனங்களின் நிலை மாறும்.

பங்கு மதிப்புகள்

பங்கு மதிப்புகள்

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 3.89 சதவீதம் வரை சரிந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why Infosys Shares Have Fallen 15% From Recent Highs?

It's not often that you see the share price of Infosys falling sharply. Until a month back the stock was trading around the Rs 1200 mark and hit a high of Rs 1219 on Oct 12. Since then, the stock has fallen almost 15 per cent to trade at Rs 1038.
Story first published: Wednesday, November 18, 2015, 18:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X