சரிவில் இருந்து மீண்டது மும்பை பங்குச்சந்தை.. 359 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: பாரீஸ் தீவிரவாத தாக்குதலில் இருந்து ஐரோப்பிய சந்தை கணிசமான அளவில் உயர்வடைந்துள்ளதால், ஆசிய சந்தையில் இன்று வர்த்தகம் சூடுபிடிக்கத் துவங்கியது.

 

டிசம்பர் மாதம் நடைபெற உள்ள அமரிக்கப் பெடரல் வங்கியின் முக்கியக் கூட்டத்தில், வட்டி உயர்வு குறித்த முக்கிய முடிவுகள் எட்டுக்க முடிவு செய்யதுள்ள அமெரிக்க அரசுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதால் மும்பை பங்குச்சந்தை மட்டும் அல்லாமல் ஆசிய சந்தையை முழுமையாக இன்று சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றது.

சரிவில் இருந்து மீண்டது மும்பை பங்குச்சந்தை.. 359 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!

இதனால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 359 புள்ளிகள் வரை உயர்ந்து 25,841 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடும் 110.95 புள்ளிகள் உயர்ந்து 7842.75 புள்ளிகளை அடைந்து வியாழக்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஆக்சிஸ் வங்கி, கோல் இந்தியா, சன் பார்மா மற்றும் டாக்டர் ரெட்டி ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.

சரிவில் இருந்து மீண்டது மும்பை பங்குச்சந்தை.. 359 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!

புதன்கிழமை மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்த இன்போசிஸ் இன்று 2.69 சதவீதம் வரை உயர்ந்து லாபகரமான பாதையில் பயணிக்கத் துவங்கியுள்ளது.

அதேபோல் இன்று பஜாஜ் ஆட்டோ நிறுவனப் பங்குகள் 3.16 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மேலும் ஹெச்டிஎப்சி, மாருதி, கெயில், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ, பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், ஐடிசி போன்ற முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் இன்று லாபத்தைச் சந்தித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex ends 359 pts up, Nifty ends at 7,842 on Fed comments

The domestic markets ended the day sharply higher in trade on Thursday tracking positive trend seen in Asian markets as Federal minutes of the October 27-28 meeting signalled at high probability of December rate hike but a gradual tightening going ahead.
Story first published: Thursday, November 19, 2015, 16:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X