மும்பை: நுகர்வோர் நிறுவனங்களின் மீது செய்யப்பட்ட அதிகளவிலான முதலீடு காரணமாகவும், மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத ஊதிய உயர்வு அளிப்பதற்கான 7வது சம்பள கமிஷன் அறிக்கை ஆகியவை இன்று இந்திய சந்தையை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்வு குறித்த குறைவான வாய்ப்புகள் ஆசிய சந்தையில் அதிகளவிலான வர்த்தகத்தை உருவாக்கியது. இந்தச் சூழ்நிலையில் மும்பை பங்குச்சந்தைக்கு மிகவும் சாதகமாக அமைந்தது.

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தை சரிவுடன் துவங்கினாலும், 11 மணியளவில் வர்த்தகம் சூடுபிடிக்கத் துவங்கியது. மேலும் சந்தையில் நுகர்வோர் நிறுவனங்கள் மீது செய்யப்பட்ட முதலீடு சென்செக்ஸ் குறியீடு லாபகரமான நிலையில் பயணித்தது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 26.57 புள்ளிகள் உயர்வில் 25,868.49 புள்ளிகளை எட்டியது. இதேபோல் நிஃப்டி குறியீடும் 13.80 புள்ளிகள் உயர்வில் 7,856.55 புள்ளிகளை அடைந்தது.

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் விப்ரோ, மஹிந்திரா, மாருதி, டிசிஎஸ், ரிலையன்ஸ், இன்போசிஸ், சிப்லா போன்ற முன்னணி நிறுவனங்கள் கணிசமான உயர்வைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் இயற்கை எரிவாயு மற்றும் சுத்திகரிப்பு நிறுவனமான கெயில் இன்று ஓரே நாளில் 9.59 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
சந்தையில் டாப் 30 நிறுவனங்களில் வராக் கடன் மற்றும் செயல்படா சொத்துக்களின் அளவில் தொடர் உயர்வால் வங்கிப்பங்குகள் இன்று அதிகளவில் பாதித்தது.


Click it and Unblock the Notifications