மோடி அறிவித்த தங்க முதலீட்டு திட்டம் தோல்வியா..?

டெல்லி: இந்திய மக்கள் மற்றும் கோவில்களில் முடங்கியுள்ள 20,000 டன் தங்கத்தை, புழக்கத்திற்குக் கொண்டு வரவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் தங்க இறக்குமதியை குறைக்கப் பிரதமர் மோடி 2 வாரங்களுக்கு முன்பு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 தங்க முதலீட்டுத் திட்டங்களை அறிவித்தார்.

இதில் ஒன்று தான் Gold Monetisation Scheme எனப்படும் தங்க நாணயமாக்கும் திட்டம்.

400 கிராம் தங்கம்

400 கிராம் தங்கம்

பிரதமர் பெருமையுடன் வழங்கும் திட்டம் எனப் போஸ்டர் ஒட்டாத குறையாக விளம்பரம் செய்யப்பட்ட இத்திட்டத்தில் 2 வாரக் காலத்தில் வெறும் 400 கிராம் தங்கம் மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது என GJEPC அமைப்பு தெரிவித்துள்ளது.

GJEPC என்பதன் விரிவாக்கம் இரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பு.

 

 பிஐஎஸ் தரம்வாய்ந்த

பிஐஎஸ் தரம்வாய்ந்த

இத்திட்டத்தை மேலும் பிரபல படுத்த இந்தியாவில் உள்ள 13,000 பிஐஎஸ் தரச் சான்றிதழ் பெற்ற நகை கடைகளைக் கலக்டிங் ஏஜென்டாக அறிவிக்க வேண்டும் என GJEPC அமைப்பின் தலைவர் அனில் ஷன்க்வால் அவர்கள் பொருளாதார விவகார துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் அவர்களிடம் கூறினார்.

பிரபலம் அடையும் வாய்ப்புகள்

பிரபலம் அடையும் வாய்ப்புகள்

அனில் ஷன்க்வால் அவர்களின் பரிந்துரைக்கு இணங்க 13,000 நகை கடைகளைக் கலக்டிங் ஏஜென்டாக அறிவித்தால் இத்திட்டம் கூடிய விரைவில் மக்களிடம் சென்றடையும்.

3.5 லட்சம் நகை கடைகள்

3.5 லட்சம் நகை கடைகள்

இன்றைய நிலையில் இந்தியாவில் 3.5 லட்சம் நகை கடைகள் உள்ளது. இதில் 13,000 கடைகள் மட்டுமே பிஐஎஸ் தர சான்றிதழ் பெற்றுள்ளது.

மோடிக்குத் தோல்வி

மோடிக்குத் தோல்வி

இந்நிலையில் பிரதமர் மோடி அறிவித்த அனைத்துத் திட்டங்களும் குறிப்பிடத்தகும் அளவில் வெற்றி பெற்றுள்ள நிலையில் தங்க நாணயமாக்கும் திட்டம் எனப்படும் Gold Monetisation Scheme தோல்வியில் முடிவடைந்ததாகக் கருதப்படுகிறது.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

மேலும் இத்திட்டம் குறித்த போதிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லை எனவே தான் இத்திட்டம் வெற்றிபெறவில்லை என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+