மும்பை: ஆசிய சந்தையில் நிலவிய மந்தமான வர்த்தகம், டாலர் உயர்வால் காமாடிட்டி பொருட்களின் விலை உயர்வு, சீனா சந்தையின் குறைவான தேவை மட்டும் அல்லாமல் மும்பை பங்குச்சந்தையில் எஃப் அண்ட் ஓ சந்தையில் நவம்பர் மாத ஆர்டர்கள் முடிவுக்கு வந்ததால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் இன்று குறைந்த அளவில் மட்டுமே முதலீடு செய்தனர்.

இதனால் திங்கட்கிழமை வர்த்தக முழுவதும் சென்செக்ஸ் குறியீடு ஏற்ற இறக்கங்கள் நிறைந்து காணப்பட்டது. திங்கட்கிழமை வர்த்தகம் உயர்வுடன் துவங்கினாலும் அடுத்தச் சில நிமிடங்களில் நவம்பர் மாத ஆர்டர்கள் அதிகளிவில் விற்கப்பட்டதால் சென்செக்ஸ் சரிய துவங்கியது.
சர்வதேச சந்தைகளின் தாக்கத்தால் இன்றைய வர்த்தகம் முழுவதும் மந்தமாகவே காணப்பட்டது. இதனால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் முடிந்தது.

திங்கட்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 49.15 புள்ளிகள் சரிந்து 25,819.34 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டிகுறியீடு 7.30 புள்ளிகள் குறைந்து 7,849.25 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்தது.
மேலும் இன்றைய வர்த்தகம் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. குறிப்பாக ஹீரோமோட்டோ கார்ப், பஜாஜ் ஆட்டோ நிறுவனப் பங்குகள் 2 சதவீதத்திற்கு அதிகமான வளர்ச்சியை அடைந்தது.

மேலும் டாக்டர் ரெட்டி, லூப்பின், ஆக்சிஸ் வங்கி, ரீலையன்ஸ், மஹிந்திரா, விப்ரோ, எல்அண்ட்டி, ஐசிஐசிஐ மற்றும் இன்போசிஸ் கணிசமான உயர்வும், டாடா ஸ்டீல் மற்றும் ஐடிசி நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications