மும்பை: ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஜடிபி தகவல் இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தை லாபகரமான பாதைக்குக் கொண்டு சென்றது.
இன்றைய வர்த்தகம் துவக்கம் முதல் குறைவான வர்த்தகத்தைப் பெற்று வந்த மும்பை பங்குச்சந்தை ரிச்ர்வ் வங்கியின் அறிவிப்புகள் திடீர் சரிவை ஏற்படுத்தியது. இதன்பின் நேற்று வெளியிடப்பட்ட ஜிடிபி தரவுகளின் மூலம் இந்திய சந்தையின் அன்னிய முதலீட்டின் அளவு கணிசமாக உயர்ந்தது. இதனால் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் முழுவதும் நிலையான வர்த்தகத்தைப் பெற்று லாபகரமான நிலையில் வர்த்தகம் முடிவடைந்தது.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 23.74 புள்ளிகள் உயர்வில் 26,169.41 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 19.65 புள்ளிகள் உயர்வுடன் 7,954.90 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.
ஆசிய சந்தையில் ஆஸ்திரேலியா, சீனா, ஹாங்காங், ஜப்பான், தைவான் ஆகிய அனைத்தும் லாபகரமான நிலையிலேயே முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications