தள்ளுபடி விற்பனையால் ரூ.2,000 கோடி நஷ்டம்.. மூக்கால் அழும் 'பிளிப்கார்ட்'..!

பெங்களூரு: நாட்டின் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் சந்தையில் அமேசான், ஸ்னாப்டீல் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கவும், வாடிக்கையாளர்களைக் கவரவும் அதிரிபுதிரியாகத் தள்ளுபடிகளை வாரி வழங்கியது. இதனால் பிளிப்கார்ட் சுமார் 2,000 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துத் தவித்து வருகிறது.

அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் நிறுவனங்கள் தங்களின் தளத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வந்த நிலையில், பிளிப்கார்ட் தன் தள்ளுபடி வேலையைக் காட்டி சுட்டுக்கொண்டது.

வாங்க பிளிப்கார்ட் நிறுவனத்தின் முழுமையான நிதிநிலையைப் பார்ப்போம்.

ரூ.2,000 கோடி நஷ்டம்

ரூ.2,000 கோடி நஷ்டம்

பிளிப்கார்ட் இண்டர்நெட் என்னும் பெயரில் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்திற்கான தொழில்நுட்ப சேவையை வழங்கி வருகிறது.

இந்நிலையில் பிளிப்கார்ட் இண்டர்நெட் சமர்ப்பித்த அறிக்கையில், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்நிறுவனம் 1,096.4 கோடி ரூபாய் நஷ்டத்தையும், மொத்த விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் இந்தியா 836.5 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

2013ஆம் நிதியாண்டில் இதன் அளவு 715 கோடியாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

மொத்த விற்பனை

மொத்த விற்பனை

2014ஆம் நிதியாண்டில் இரு நிறுவனங்களின் மொத்த விற்பனை 10,390 கோடி ரூபாயாக இருந்தது எனப் பிளிப்கார்ட் இண்டர்நெட் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் நிதிநிலை குறித்த கேள்விகளுக்குப் பிளிப்கார்ட் எவ்விதமான பதில்களையும் அளிக்கவில்லை.

 

விநியோக கட்டணம்

விநியோக கட்டணம்

இந்நிறுவனத்தின் மொத்த விற்பனை அளவுகளில் 35-50 சதவீத தொகை லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விநியோகத்திற்காகவே செலவிடப்படுகிறது. இதனால் பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் போன்ற முன்னணி நிறுவனங்கள் எளிமையான கட்டண குறைவான விநியோக சேவையை வடிவமைத்து வருகிறது.

2015ஆம் ஆண்டில் எப்படி..

2015ஆம் ஆண்டில் எப்படி..

2015ஆம் நிதியாண்டில் பிளிப்கார்ட் விற்பனையில் 6 மடங்கு உயர்வைச் சந்திக்கும் எனவும் இதனால் இந்நிறுவனத்தின் விற்பனை அளவுகள் மட்டும் சுமார் 60,000 கோடி ரூபாய் வரை உயர்வும் இந்நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவின் தலைவரான முகேஷ் பன்சால் தெரிவித்துள்ளார்.

 புதிய முறை வேண்டும்

புதிய முறை வேண்டும்

தற்போதைய நிலையில் பிளிப்கார்ட் தனது விற்பனை தளத்தில் உற்பத்தி பொருட்களுக்கான விலையில் எவ்விதமான லாபம் இல்லாமல் மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இது வாடிக்கையாளர்களைக் கவரும் ஆனால் நிறுவனத்தின் நிதிநிலையைப் பதம் பார்த்துவிடும்.

மேலும் துவக்க காலத்தில் இது சரியான முடிவாக இருந்தாலும் கூட நீண்டகால விற்பனை முறைக்கு ஏற்றதல்ல. எனவே கூடிய விரைவில் பிளிப்கார்ட் புதிய விற்பனை முறையை வகுக்க வேண்டும் என் ஈகாமர்ஸ் துறை வல்லுநர் ஒருவர் தெரிவித்தார்

 

முதலீடு

முதலீடு

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டு சந்தையில் சிறப்பாக விளங்கும் பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து முதலீடு குவிந்து வருகிறது. இந்நிலையில் அமேசான் இந்தியா நிறுவனம் தனது முதலீட்டு அளவுகளைச் சுமார் 2 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது.

வளர்ச்சியா..?? வீழ்ச்சியா..??

வளர்ச்சியா..?? வீழ்ச்சியா..??

இந்தியாவில் ஈகாமர்ஸ் மற்றும் ஆன்லைன் சேவைகள் புதிதாக இருந்தாலும் மக்கள் மத்தியில் மிகவும் வேகமாகத் தனது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் இத்தகைய நிறுவனங்களின் ஸ்திரதன்மையைப் பார்க்கும் போதுதான் பிரச்சனை வருகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம் ஈகாமர்ஸ் வளர்ச்சியா..?? வீழ்ச்சியா..?? என்று.

 

சாயம் வெளுக்கத் துவங்கியது

சாயம் வெளுக்கத் துவங்கியது

ஆன்லைன் வர்த்தகத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்த துறையில் ஆன்லைன் உணவு நிறுவனங்கள்.

இத்துறை நிறுவனங்களின் உண்மையான நிலையைத் தெரிந்துகொள்ள இதை மட்டும் கிளிக் பண்ணுங்கள் போதும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+