மும்பை: சர்வதேச நாடுகளில் பொருளாதாரத்தில் அமெரிக்காவுடன் போட்டி போடும் சீனா, நவம்பர் மாத்திற்கான வர்த்தக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் எப்போதும் இல்லாத அளவிற்குச் சீன சந்தையின் வர்த்தகம் மிகக் குறைவான அளவைப் பதிவு செய்துள்ளது. இதனால் ஆசிய சந்தை முழுவதும் இன்று மந்தமான நிலை நிலவியது.

OPEC நாட்களின் அறிவிப்புகளால் இன்றும் எண்ணெய் மற்றும் மெட்டல் வர்த்தகம் அதிகளவில் பாதித்தது. இதேபோல் அமெரிக்கச் சந்தையிலும் எனர்ஜி மற்றும் மினரல் துறை நிறுவனங்கள் முதலீட்டுச் சரிவையும், வர்த்தகச் சரிவையும் சந்தித்தது.
இந்திய சந்தையில் ஜிஎஸ்டி வரி அமலாக்கும் குறித்த நடவடிக்கையின் மூலம் ரியல் எஸ்டேட், மெட்டல் மற்றும் இன்பராஸ்டக்சர் துறை அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையிலன் சென்செக்ஸ் குறியீடு 219.78 புள்ளிகள் சரிந்து 25,310.33 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 63.70 புள்ளிகள் குறைந்து 7,701.70 புள்ளிகளையும் எட்டியுள்ளது.
மேலும் இன்றைய சர்வதேச சந்தையை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய்யின் விலை 7 வருடச் சரிவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications