மும்பை: மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி, ரிசர்வ் வங்கியின் புதிய வட்டி கணக்கீட்டு முறை, அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்வு மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் பத்திர கொள்முதல் நடவடிக்கையின் குறைந்த கால நீட்டிப்பு ஆகியவை இந்திய சந்தையைத் தொடர்ந்து பதம் பார்த்தது வருகிறது.
கடந்த 6 நாட்களில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 1,100 புள்ளிகளை இழந்துள்ளது.

இந்நிலையில் புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 274.28 புள்ளிகள் வரை சரிந்து 25,036 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 89.20 புள்ளிகள் சரிந்து 7,612.50 புள்ளிகளை எட்டிய இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் வேதாந்த, டாடா ஸ்டீல், கோல் இந்தியா நிறுவனப் பங்குகள் 3 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்தது. இதேபோல் பார்தி ஏர்டெல், ஹீரோமோட்டோகார்ப், லூபின், டாக்டர் ரெட்டி, ரிலையன்ஸ், ஹின்டால்கோ, பஜாஜ் ஆட்டோ, சிப்லா ஆகியவை 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்துள்ளது.
மேலும் புதன்கிழமை வர்த்தகத்தில் சந்தையின் டாப் 30 நிறுவன பட்டியலில் பெல், டிசிஎஸ், ஐடிசி, ஒஎன்ஜிசி, என்டிபிசி ஆகிய நிறுவனங்கள் மட்டுமே லாபத்தைச் சந்தித்தது.


Click it and Unblock the Notifications