தப்பிப் பிழைத்த மும்பை பங்குச்சந்தை.. 216 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!

மும்பை: 6 நாள் வர்த்தகத்தில் 1,100 புள்ளிகளை இழந்து அதளப் பாதாளத்திற்குச் சென்று கொண்டு இருந்த மும்பை பங்குச்சந்தை, வியாழக்கிழமை முட்டி மோதி 200 புள்ளிகள் உயர்வுடன் லாபகரமான நிலையில் வர்த்தகம் செய்யப்பட்டது.

வியாழக்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் மந்தமாகச் செயல்பட்ட மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் மதிய வேளையில் சூடுப்பிடக்கத் துவங்கியது.

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 2016.27 புள்ளிகள் உயர்வில் 25,252.32 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 70.80 புள்ளிகளை எட்டி 7,683.30 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

ஸ்பைஸ்ஜெட்

ஸ்பைஸ்ஜெட்

மழை வெள்ளத்தால் பதிக்கப்பட்ட சென்னையில் இருந்து செல்லும் ஸ்பைஸ்ஜெட் நிறுவன விமானங்களில், பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று பொய் கூறி ஒரு டிக்கெட்டின் 22,000 ரூபாய்க்கு விற்பனை செய்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தைப் பற்றி இந்நிறுவன வாடிக்கையாளர் ஒரு சமுக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தார்.

இந்தப் பதிவு ஸ்பைஸ்ஜெட் நிறுவனப் பங்குகளை இன்று பதம்பார்த்து உள்ளது. பங்குகளின் உண்மையான நிலையை அறிந்துக்கொள்ளி இங்க ஒரு கிளிக் தட்டுங்கள்.

 

சல்மான் கான்

சல்மான் கான்

மதுபோதையில் கார் ஒட்டி ரோடில் உறங்கிக் கொண்டு இருந்த அப்பாவி மக்களைக் கொன்ற வழக்கில் சல்மான் கான் முழுமையாக விடுதலை செய்யப்பட்டார். இதனால் இவரது நிறுவன அறக்கட்டளையின் பீயிங் ஹீயூமன் டிசர்ட்களை விற்கும் மன்தானா இன்டஸ்டரீஸ் நிறுவனப் பங்குகள் இன்று 2.64 சதவீதம் வரை உயர்ந்தது.

உலகச் சந்தைகள்

உலகச் சந்தைகள்

ஆசிய சந்தையில் இன்று ஆஸ்திரேலியா, சீனா, ஹாங்காங், ஜப்பான், தைவான் ஆகிய முக்கியச் சந்தைகள் அனைத்தும் சரிவை தழுவிய நிலையில் இந்திய சந்தை மட்டும் .90 சதவீத உயர்வை எட்டியுள்ளது.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு 0.12 சதவீதம் உயர்ந்து 66.76 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

தங்கம் விலை

தங்கம் விலை

வியாழக்கிழமை வர்த்தகத்தில் 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 2 ரூபாய் குறைந்து 2,411 ரூபாயாக விற்கப்பட்டது. இதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலை 2 ரூபாய் குறைந்து 2,576 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+