மும்பை: பெடரல் ரிசர்வ் வங்கியின் தாக்கத்தைத் தாண்டி, இந்தியாவின் தொழிற்துறை உற்பத்தி மற்றும் மொத்த விலை பணவீக்கத்தின் அளவுகள் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு இந்திய சந்தை மீது நம்பிக்கை அதிகரித்தது.
இதனால் வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு அதிகளவிலான ஏற்ற இறக்கத்துடன் 105.92 புள்ளிகள் வரை உயர்ந்து இன்றைய வர்த்தகம் லாபகரமான நிலையில் முடிவடைந்தது.

திங்கட்கிழமை காலை வர்த்தகம் சரிவுடன் துவங்கினாலும், ஐஐபி மற்றும் WPI அளவுகள் கணிசமான அன்னிய முதலீட்டையும் நிலையான சில்லறை முதலீட்டாளர்களின் வர்த்தகத்தை ஈர்த்தது. இதனால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 130 புள்ளிகள் வரை உயர்ந்தது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 105.92 புள்ளிகள் அல்லது 0.42 சதவீதம் வரை உயர்ந்து 25,150.35 புள்ளிகளை எட்டியது. இதேபோல் நிஃப்டி குறியீடு 39.60 புள்ளிகள் உயர்வடைந்து 7,650.05 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

வாரத்தின் முதல் வர்த்தகத்தில் சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், ஓஎன்ஜிசி, பார்தி ஏர்டெல், எல் அண்ட் டி, டிசிஎஸ், ஐடிசி, எஸ்பிஐ, பஜாஜ் ஆட்டோ, ஐசிஐசிஐ, சிப்லா ஆகிய நிறுவனங்கள் கணிசமான சரிவைச் சந்தித்தது.
இன்றைய மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் மூன்று மாத சரிவை பதிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications