மும்பை: அமெரிக்கப் பெடரல் ரிசர்வ், 10 வருடங்களுக்குப்பின் தனது வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்துள்ளதால் சர்வதேச சந்தைகள் அனைத்தும் இன்று லாபகரமாகச் செயல்படத் துவங்கியது. இதனால் 1 மாதமாக மந்தமாகச் செயல்பட்ட மும்பை பங்குச்சந்தை இன்று ஓரே நாளில் 300 புள்ளிகள் வரை உயர்ந்து அசத்தியுள்ளது.

வியாழக்கிழமை வர்த்தகம் துவங்கும் ஐரோப்பிய சந்தை துவங்கும் முன் மந்தமாகச் செயல்பட்ட மும்பை பங்குச்சந்தை 1 மணி முதல் தொடர் உயர்வைச் சந்தித்தது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 309.41 புள்ளிகள் உயர்ந்து 25,803.78 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 93.45 புள்ளிகள் உயர்வில் 7,844.35 புள்ளிகள் அடைந்து வியாழக்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
இன்று சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் கோல் இந்தியா, லுப்பின், கெயில், ஆக்சிஸ் வங்கி ஒஎன்ஜிசி ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications