மும்பை: அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கி 10 வருடங்களுக்குப் பிறகு உயர்த்திய வட்டி விகிதத்தால் சர்வதேச சந்தையில், வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடங்கியது. அதேபோல் நாணய சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடு அதிகளவில் குறைந்து.
இத்தகைய சூழ்நிலைகளில் கடன் சந்தையிலும் பெரும் அளவிலான முதலீட்டை இழந்து தவிக்கிறகு இந்திய சந்தை.
பங்குச்சந்தை
வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 284.56 புள்ளிகள் சரிந்து 25,519.22 புள்ளிகளை எட்டி முதலீட்டாளர்களைக் கவலையில் ஆழ்த்தியது. இதேபோல் நிஃப்டி குறியீடும் 82.40 புள்ளிகள் சரிந்து 7,761.95 புள்ளிகளை அடைந்து முதலீட்டாளர்களின் முதலீட்டுக்குப் பாதகம் விளைவிக்கும் நிலைக்குத் தள்ளியது.
ப்ளூ சிப் பங்குகள்
மோசமான சந்தை நிலவரத்தால் ப்ளூ சிப் பங்குகளும் இன்று அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது. குறிப்பாக மென்பொருள் துறை சார்ந்த நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தது. இதற்கு முக்கியக் காரணம் விசா மீதான அமெரிக்க அரசின் கட்டுப்பாடுகள் தான்.
நாணய சந்தை
பங்குச்சந்தையில் முதலீட்டு அளவு சரிந்ததைப் போல் நாணய சந்தையிலும், கமாடிட்டி சந்தியிலும் முதலீட்டு அளவுகள் அதிகளவில் குறைந்தது. இதனால் இந்திய சந்தையில் இன்று அனைத்து விதிமான வர்த்தகமும் பாதிக்கப்பட்டது.
சர்வதேச சந்தை
சர்வதேச சந்தையில் இன்று ஆசிய சந்தை மட்டும் அல்லாமல் ஐரோப்பிய சந்தையும் அதிகளவிலான பாதித்து அனைத்து முக்கியச் சந்தைகளும் சரிவுடன் முடிவடைந்துள்ளது. இதனால் திங்கட்கிழமை வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தங்கம் விலை
வெள்ளிக்கிழமை வர்த்தக நிலையின் படி 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 26 ரூபாய் குறைந்து 2,363 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. அதேபோல் 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 28 ரூபாய் குறைந்து 2,527 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்
வெள்ளியின் விலை
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் 855 ரூபாய் குறைந்து 1 கிலோ பார் வெள்ளியின் விலை 33,050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
டாலர் மதிப்பு
நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.43 ரூபாயாக உள்ளது.
நாணய மதிப்பு மற்றும் நாணய பரிமாற்றம் குறித்து முழுமையான தகவல்களை பெற.


Click it and Unblock the Notifications