மும்பை: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்கள் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய சந்தையில் தொடர் விடுமுறையின் மூலம் அதிகளவிலான வர்த்தகம் குறைந்துள்ளது. இதனால் இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடு குறைந்து சென்செக்ஸ் குறியீடு 170 புள்ளிகளை வரை சரிந்துள்ளது.
மேலும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தையின் தொடர் விடுமுறையின் காரணமாக இந்திய ஐடி நிறுவனப் பங்குகளின் நிலை மோசமடைந்தது.
சென்செக்ஸ் குறியீடு
திங்கட்கிழமை வர்த்தகத்தில் 200 புள்ளிகள் வரை உயர்ந்த மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தகத்தில் 145.25 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.
வர்த்தகத் துவக்கத்தில் குறைந்த அளவிலான சரிவை சந்தித்த மும்பை பங்குச்சந்தை ஐரோப்பிய சந்தை துவங்கிய சில மணிநேரங்களில் சென்செக்ஸ் தொடர் சரிவைச் சந்தித்தது.
நிஃப்டி
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ப்ளூ சிப் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதால் நிஃப்டி குறியீடு 48.35 புள்ளிகள் வரை சரிந்து 7,786.10 புள்ளிகளை அடைந்தது.
ஐடி நிறுவனங்கள்
பொதுவாக இந்திய ஐடி நிறுவனங்களின் பெரும் அளவிலான வர்த்தகம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தையைச் சார்ந்து உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்கள் மேற்கத்திய நாடுகளில் வெகு விமர்சியாகக் கொண்டாடப்படுவதால் 24 ஆம் தேதியில் இருந்து ஜனவரி 2ஆம் தேதி வரை அனைத்துத் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
இதன் காரணமாக இந்திய சந்தையில் ஐடி நிறுவனப் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்கத் துவங்கினர்.
தங்கம் விலை
இன்றைய நாணய சந்தை வர்த்தகத்தில் 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 14 ரூபாய் அதிகரித்து 2,573 ரூபாய்க்கும், 22 கேரட் 1 கிராம் தங்கம் 13 ரூபாய் அதிகரித்து 2,406 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications