மும்பை: உண்மையில் 2015ஆம் ஆண்டு மும்பை பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குச் சாதகமாக அமையவில்லை என்றே சொல்ல வேண்டும். கடந்த 12 மாத காலத்தில் பிஎஸ்ஈ சென்செக்ஸ் குறியீடு 6 சதவீதம் வரை உயர்ந்தாலும், பிஎஸ்ஈ500 குறியீடு 3 சதவீதம் வரை சரிந்து முதலீட்டாளர்களின் பணத்தைப் பதம் பார்த்துவிட்டது.
இத்தகைய சூழ்நிலையில் பிஎஸ்ஈ500 சந்தையில் 28 நிறுவனங்கள் அசத்தலா லாபத்தை அள்ளித் தெறிக்கவிட்டுள்ளது. இதேபோல் எப்போதும் இல்லாத வகையில் சுமார் 181 நிறுவனங்கள் 2 இலக்க வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில் 2015ஆம் ஆண்டில் சந்தையில் அதிக ரிட்டன்களை அளித்த டாப் 15 நிறுவனங்களைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் பட்டியலிட்டுள்ளது.
நீல்கமல் லிமிடெட்
கடந்த ஒரு வருடத்தில் நாற்காலி மற்றும் மேஜை தயாரிப்பு நிறுவனமான நீல்கமல் லிமிடெட் முதலீட்டாளர்களுக்குச் சுமார் 166 ரூபாய் ரிட்டனை அளித்துள்ளது.
ப்லீஸ் ஜிவிஎஸ் பார்மா லிமிடெட்
2015ஆம் ஆண்டில் முதலீட்டாளர்களுக்குப் பிலீஸ் ஜிவிஎஸ் பார்மா லிமிடெட் 183.24 ரூபாய் ரிட்டனை அளித்துள்ளது.
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் லிமிடெட்
2015ஆம் ஆண்டில் முதலீட்டாளர்களுக்கு ஃபோர்ஸ் மோட்டார்ஸ் லிமிடெட் 188.07 ரூபாய் ரிட்டனை அளித்துள்ளது.
சென்னை பெட்ரோலியம்
2015ஆம் ஆண்டில் முதலீட்டாளர்களுக்குச் சென்னை பெட்ரோலியம் 198.03 ரூபாய் ரிட்டனை அளித்துள்ளது.
ரிக்கோ இந்தியா லிமிடெட்
ரிக்கோ இந்தியா லிமிடெட் நிறுவனம் 2015ஆம் ஆண்டில் முதலீட்டாளர்களுக்குச் சுமார் 199.07 ரூபாய் ரிட்டனை அளித்துள்ளது.
டேக் சொல்யூஷன்ஸ் லிமிடெட்
டேக் சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் 2015ஆம் ஆண்டில் முதலீட்டாளர்களுக்குச் சுமார் 208.32 ரூபாய் ரிட்டனை அளித்துள்ளது.
இன்டோ கவுன்ட் இன்டஸ்ட்ரீஸ்
கடந்த ஒரு ஆண்டில் இன்டோ கவுன்ட் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 215.56 ரூபாய் ரிட்டனை அளித்துள்ளது.
கேப்லீன் பாயின்ட் ஆய்வுக் கூடம்
கடந்த ஒரு ஆண்டில் கேப்லீன் பாயின்ட் ஆய்வுக் கூடம் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 238.07 ரூபாய் ரிட்டனை அளித்துள்ளது.
குவாலிட்டி லிமிடெட்
2015ஆம் ஆண்டில் முதலீட்டாளர்களுக்குக் குவாலிட்டி லிமிடெட் 239.97 ரூபாய் ரிட்டனை அளித்துள்ளது.
இன்டெலெக்ட் டிசைன் அரினா
2015ஆம் ஆண்டில் முதலீட்டாளர்களுக்கு இன்டெலெக்ட் டிசைன் அரினா நிறுவனம் யாரும் எதிர்பாராத வகையில் 241.30 ரூபாய் ரிட்டனை அளித்துள்ளது.
ஜூப்லியன்ட் லைப் சைன்ஸ் லிமிடெட்
இந்தியாவில் பார்மா மற்றும் லைப் சைன்ஸ் துறையில் சிறந்து விளங்கும் ஜூப்லியன்ட் லைப் சைன்ஸ் லிமிடெட் முதலீட்டாளர் பணத்திற்குப் பாதகம் விளைவிக்காமல் அசத்தலாக 252.91 ரூபாய் ரிட்டனை அளித்துள்ளது.
டாடா எலக்ஸி லிமிடெட்
டாடா குழுமத்தின் கிளை நிறுவனமான டாடா எலக்ஸி லிமிடெட் 2015ஆம் ஆண்டில் புதிய வாடிக்கையாளர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆர்டர்களைப் பெற்றதால் 2015ஆம் ஆண்டு வர்த்தகம் டாடா எலக்ஸி நிறுவனத்திற்கு மிகவும் சாதகமாக அமைந்தது.
இந்நிலையில் கடந்த 12 மாதத்தில் முதலீட்டாளர்களுக்கு 270.46 ரூபாய் ரிட்டனை அளித்து அசத்தியுள்ளது.
ஸ்பைஸ்ஜெட்
ஒரு வருடத்திற்கு முன் மிகப்பெரிய நிதிநெருக்கடியில் சிக்கித் தவித்த ஸ்பைஸ்ஜெட் அஜய் சிங் தலைமையில் கடந்த ஒரு வருடமாக ஏவியேஷன் துறையிலேயே மிகவும் சிறந்து விளங்கும் நிறுவனமாகத் திகழ்கிறது.
இந்நிலையில் கடந்த ஒரு வருடத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு 295.64 ரூபாய் அளித்துள்ளது.
காயத்ரி பிராஜெட்ஸ் லிமிடெட்
நாட்டின் முன்னணி இன்பாரஸ்டக்சர், பவர், ரியல்எஸ்டேட் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமான காயத்ரி பிராஜெட்ஸ் லிமிடெட் தனது முதலீட்டாளர்களுக்கு 2015ஆம் ஆண்டில் 365.68 ரூபாய் ரிட்டனை அளித்துள்ளது.
ராஜேஷ் எக்ஸ்போர்ட்
இந்தியாவில் தங்கம் மற்றும் வைர நகைகளை அதிகளிவில் ஏற்றுமதி மற்றும் வர்த்தகம் செய்து வரும் ராஜேஷ் எக்ஸ்போர்ட் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் முதலீட்டாளர்களுக்கு 376.23 ரூபாய் ரிட்டனை அளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் 2015ஆம் ஆண்டில் மும்பை பங்குச்சந்தையில் பிஎஸ்ஈ500 குறியீட்டுச் சந்தையில் சிறந்து நிறுவனமாகத் திகழ்கிறது.
மும்பை பங்குச்சந்தை
கடந்த ஒரு வருடத்தில் மும்பை பங்குச்சந்தையின் முழுமையான வர்த்தக நிலை.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications