மும்பை: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையின் தொடர் விடுமுறையின் காரணமாக இந்திய சந்தையில் பன்னாட்டு முதலீட்டாளர்களின் பங்கு விற்பனை மிகவும் குறைவாக இருந்தது.

இதன் காரணமாக இந்திய சந்தையில் வர்த்தகம் இன்று காலை முதல் நிலையான வர்த்தகத்துடன் சென்செக்ஸ் குறியீடு தொடர்ந்து அதிகரிக்கத் துவங்கியது.
புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் நிலையான மற்றும் லாபகரமான வர்த்தகம் பெற்று வந்த நிலையில், சென்செக்ஸ் குறியீடு 259.65 புள்ளிகள் உயர்வுடன் 25,850.30 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

அதேபோல் சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் 79.85 புள்ளிகள் உயர்வில் 7,865.95 புள்ளி வரை உயர்வடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் பஜாஜ் ஆட்டோ, ஏசியன் பெயின்ட், அதானி போர்ட்ஸ், ஹீரோமோட்டோ கார்ப் மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் மட்டும் சரிவை சந்தித்தது.
மேலும் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 3 வாரச் சரிவை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications