மும்பை: இந்தியாவில் புகைபிடிக்கும் பழக்கும் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், புகைபிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
அதுமட்டும் அல்லாமல் உலகிலேயே அதிகப் புகைப்பழக்கம் கொண்ட பெண்கள் நாடுகளில் பட்டியலில் அமெரிக்க முதல் இடம் பெற்றுள்ள நிலையில், இந்திய பெண்கள் அடுத்தச் சில ஆண்டுகளில் அமெரிக்காவுடன் போட்டி போடும் அளவிற்கு உயர வாய்ப்புள்ளதாக மத்திய அரசின் ஆய்வுகள் கூறுகிறது.
இந்தியா
கடந்த 2 வருடத்தில் புகைபிடிப்போர் எண்ணிக்கை அல்லது மக்களின் புகைபிடிக்கும் பழக்கம் சுமார் 10 சதவீதம் அளவில் குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை செய்த ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
விற்பனை
இந்தியாவில் 2014-15ஆம் ஆண்டுக் காலத்தில் சுமார் 93.2 பில்லியன் சிகரெட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2012-13ஆம் ஆண்டு அளவுகளைப் பார்க்கும் போது இதன் அளவு 10 பில்லியன் குறைவாகும்.
இதேகாலக்கட்டத்தில் சிகரெட் உற்பத்தி அளவுகளும் 117 பில்லியன் என்ற எண்ணிக்கையில் இருந்து 105.3 பில்லியனாகக் குறைந்துள்ளது.
பெண்கள்
இம்நிலையில் இந்தியாவில் புகைபிடிக்கும் பழக்கம் கொண்ட பெண்களின் எண்ணிக்கை கடந்த 32 வருடத்தில் 2 மடங்குக்கும் அதிமாக உயர்ந்துள்ளது என இந்த ஆய்வறிக்கை ஒரு அதிர்ச்சி தகவலை அளித்துள்ளது.
2வது இடத்தில் இந்தியா
தற்போதைய நிலையில் புகைபிடிக்கும் பழக்கம் கொண்ட பெண்கள் வாழும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து சீனா, ரஷ்யா, பிரேசில், ஆகிய நாடுகள் உள்ளது.
1980 முதல் 2012 வரை
இந்தியாவில் புகைபிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 1980ஆம் ஆண்டில் 5.3 மில்லியனாக இருந்தது, 2012ஆம் ஆண்டில் இதன் அளவு 2 மடங்கு அதிகரித்து 12.7 மில்லியனாக உயர்ந்துள்ளது. தற்போது இதன் எண்ணிக்கை 15.0 மில்லியனாக உயர்ந்திருக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
புகைபிடிக்கும் பெண்கள்
புகைபிடிக்கும் பெண்கள் குறித்த ஆய்வுகளை வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அமைப்பு சுமார் 187 நாடுகளில் செய்யப்பட்ட தனது ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா
அமெரிக்காவில் புகைபிடிக்கும் பெண்கள் எண்ணிக்கை 1980 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் 24.8 மில்லியன் என்ற எண்ணிக்கையில் இருந்து தற்போது 17.7 மில்லியனாகக் குறைந்துள்ளது.
போட்டி
2012ஆம் ஆண்டு நிலவரத்தின் படி இந்திய - அமெரிக்கா பெண்களுக்கு மத்தியில் வெறும் 5 மில்லியன் வித்தியாசம் தான்.
கிராமப்புறங்கள்
மேலும் இந்த ஆய்வில் இந்தியாவில், நகரபுறங்களை விடவும் கிராமப்புறங்களில் அதிகளவில் புகைபிடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதி கண்ட புதுமைப் பெண்
ஆண்களைப் போல் பெண்களும் அனைத்துத் துறைகளிலும் சாதிப்பதும், ஆளுமை செலுத்துவதும் மகிழ்ச்சியாகவும் பெருமையாக இருந்தாலும், கலாச்சாரச் சீர்கேட்டின் மூலம் நம் நாட்டுப் பெண்களின் சக்தியும், அவர்களின் வளர்ச்சியும் அதிகளவில் பாதிக்கப்படுகிறது.
இதற்காகப் போராட யாரும் இல்லையா.. அட நமக்குப் பீப் பாடல் தானே முக்கியம்..! எங்கே சிம்பு, அனிருத்..
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications