டெல்லி: மத்திய அரசு மார்ச் மாதம் அமலாக்கம் செய்ய உள்ள சரக்கு மற்றும் சேவை வரியில் பெட்ரோலியம் பொருட்களைச் சேர்ப்பதில் இருக்கும் பிரச்சனையைக் களைய புதிய மாற்றக்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செய்து வருகிறது.

இதன் படி பெட்ரோலியம் பொருட்களுக்கான வரியில் விதிப்பில் மாநில அரசு கூடுதலாக வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரியைக் குறுகிய காலம் வரை விதிக்க முடியும் என மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மத்திய அரசு அறிவிக்க உள்ள சரக்கு மற்றும் சேவை வரியில் பெட்ரோலியம் பொருட்களும் முக்கியப் பங்கு வகிக்க உள்ளது. ஆனால் இது குறுகிய காலம் வரை மட்டுமே. மேலும் இக்காலகட்டத்தில் மாநில அரசுக்கு இதன் மீதான வரியை நிர்ணயம் செய்ய, சகல உரிமைகளும் உண்டு என அறிவித்துள்ளது.

தற்போது உள்ள 300 சதவீத வரி விதிப்பில் ஜிஎஸ்டி மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குத் தலா 90 சதவீதம் வரை வரிகள் வரை விதிக்க உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் உள்ள வித்தியாசத்தைச் சரியான முறையில் ஈடு செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆலோசனை செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications