மும்பை: 2015ஆம் ஆண்டுப் போராடி வெற்றிகரமாகக் கடந்த நிலையில் 2016 புத்தாண்டை நோக்கிப் பயணிக்கும் நாம் இன்றைய பங்குச்சந்தையில் எப் அண்ட் ஓ சந்தையில் ஆர்டர்கள் முடியும் காரணத்தால் சில்லறை முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்யத் துவங்கினர்.
அதுமட்டும் அல்லாமல் ஐரோப்பிய சந்தையின் மந்தமான வர்த்தக நிலை இந்திய சந்தையைக் கணிசமாகப் பாதித்தது.
இந்நிலையில் புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 119.45 புள்ளிகள் சரிவுடன் 25,960.03 புள்ளிகளை எட்டி மீண்டும் 26,000 புள்ளிகளில் இருந்து இறங்கியது.

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடு 32.70 புள்ளிகள் சரிந்து 7,896.25 புள்ளிகளை அடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் டாப் 30 நிறுவனங்களில் டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாக்டர் ரெட்டி, என்டிபிசி, பெல், ஐடிசி, கெயில், ஹிந்துஸ்தான் யுனிலீவர் மற்றும் கோல் இந்தியா பங்குகள் மட்டுமே உயர்வடைந்தது.


Click it and Unblock the Notifications