மும்பை: சீன நாட்டின் தொழிற்துறை வளர்ச்சி, கணிப்புகளை விடவும் மோசமான நிலையை எட்டியதைத் தொடர்ந்து, இந்நாட்டின் யுவான் நாணயம் 5 வருடச் சரிவை அடைந்துள்ளது.
அதேபோல் சீன பங்குச்சந்தை குறியீடான ஷங்காய் காம்போசிட், வரலாறு காணாத அளவிற்கு 6.86 சதவீதம் வரை குறைந்து ஆசிய சந்தை முழுவதையும் பதம் பார்க்கத் துவங்கியுள்ளது.
7 சதவீத சரிவை தாங்க முடியாமல் சீன பங்குச்சந்தை வர்த்தகத்தை இன்று முழுமையாக மூடப்பட்டது.
விடுமுறைக்குப் பின்..
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்களின் நீண்ட விடுமுறைக்குப் பின் இன்று துவங்கியுள்ள நிலையில் சீன சந்தையின் வீழ்ச்சி சர்வதேச சந்தை வர்த்தகத்தை அதிகளவில் பாதித்துள்ளது.
ஆசிய சந்தை
சீன சந்தையின் மிகப்பெரிய வீழ்ச்சியின் காரணமாக ஆசிய சந்தையில் ஹாங்காங், ஆஸ்திரேலியா, ஜப்பான், நிக்கி, தைவான், இந்தியா உட்பட அனைத்துச் சந்தையும் சரிவையைச் சந்தித்துள்ளது.
சென்செக்ஸ்
திங்கட்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வர்த்தகம் துவங்கும் முதலே தொடர் சரிவைச் சந்திக்கத் துவங்கியது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 537.55 புள்ளிகள் சரிந்து 25,623.35 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடு 171.90 புள்ளிகள் குறைந்து 7,791.30 புள்ளிகளை எட்டியது.
35,000 வெறும் கனவு தானா??
2016ஆம் ஆண்டில் இந்திய பங்குச்சந்தை 35,000 புள்ளிகளை எட்டும் எனக் கணிப்புகள் வெளியாகி சில நாட்கள் கூட ஆகவில்லை, அதற்குள் 430 புள்ளிகள் வரை சரிந்து அதளப் பாதாளத்தை நோக்கிய செல்கிறது மும்பை பங்குச்சந்தை.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications