மும்பை: பல மாதங்களுக்குப் பின் இந்திய மற்றும் சர்வதேச பங்குச்சந்தையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனப் பங்குகளில் முதலீடு அதிகரித்துள்ளதால் மிகப்பெரிய சரிவில் இருந்து மும்பை பங்குச்சந்தை இன்று தப்பித்தது.
530 புள்ளிகள் இழந்து திங்கட்கிழமை வர்த்தகம் தவித்த நிலையில் இன்று வெறும் 40 புள்ளிகள் மட்டுமே சரிந்து இந்திய பங்குச்சந்தை தப்பித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 43.01 புள்ளிகள் சரிந்து 25,580.34 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 6.65 புள்ளிகள் சரிந்து 7,784.65 புள்ளிகளை அடைந்தது.
இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் ஐடி மற்றும் வங்கித்துறை பங்குகள் அதிகளவிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்குகள் சுமாப் 6.65 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதேபோல் கெயில், ஒஎன்ஜிசி, ரிலையன்ஸ், பெல் ஆகிய நிறுவனங்கள் லாபகரமான வர்த்தகத்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications