மும்பை: ஆசிய சந்தையில் மிகப்பெரிய வர்த்தகச் சந்தையாக விளங்கும் சீனாவின் பங்குச்சந்தை வர்த்தகம் இன்று துவங்கிய சில நிமிடங்களில் 7 சதவீத சரிவை எட்டி சர்கியூட் பிரேக்கர் முறையில் வியாழக்கிழமை வர்த்தகம் முழுமையாக ஆட்டோமேடிக் ஷட்-டவுன் செய்யப்பட்டது.
இதனால் ஆசிய சந்தைகள் அனைத்தும் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கக் காத்துக்கிடக்கிறது.
2வது முறை ஷட்-டவுன்
கடந்த நான்கு நாட்களில் இன்று 2வது முறையாக ஆட்டோமேடிக் ஷட்-டவுன் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சீன சந்தையின் மிகப்பெரிய வீழ்க்குக் காரணம் இந்நாட்டின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி தான். 2015ஆம் ஆண்டில் இந்நாட்டின் உற்பத்தித் துறை கணிப்புகளுக்கும் அதிகமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
15 நிமிடம் தற்காலிக முடக்கம்..
சீன சந்தையில் வியாழக்கிழமை வர்த்தகம் துவங்கி சில நிமிடங்களில் CSI 300 குறியீடு எப்போதும் இல்லாத வகையில் மளமளவென 5 சதவீதம் வரை சரிவை சந்தித்து, இதனால் பங்குச்சந்தையின் வீழ்ச்சியைக் காக்க 15 நிமிடம் தற்காலிகமாக வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டது.
ஷட்-டவுன்
இந்நிலையில் தற்காலிக முடக்கத்திற்குப் பிறகு துவங்கிய வர்த்தகம் அடுத்தச் சில நொடிகளில் 7 சதவீத சரிவை எட்டியது. இதனால் சீன பங்குச்சந்தை வர்த்தகம் இன்று ஆட்டோமேடிக் ஷட்-டவுன் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
சீனா
இத்தகை பெரும் வீழ்ச்சியைச் சமாளிக்கச் சீன அரசு சுமார் 236 பில்லியன் டாலர் பணத்தைச் செலவிடத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய்
அதுமட்டும் அல்லாமல் கடந்த சில நாட்களாகச் சவுதி அரேபியா மற்றும் ஈரான் நாடுகளுக்கு மத்தியிலான பிரச்சனையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கிட்டத்தட்ட 1 வருடமாகத் தொடர்ந்து சரிந்து வந்த கச்சா எண்ணெய்யின் விலை தற்போது திடீரென உயர்வதால் சீன சந்தைக்கு அதுவும் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இந்திய பங்குச்சந்தை
சீன சந்தையின் வீழ்ச்சியால் மும்பை பங்குச்சந்தை இன்று துவக்கத்திலேயே 300 புள்ளிகள் சரிவுடன் துவங்கி, தற்போது 420 புள்ளிகள் வரை சரிந்து 24,985 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆசிய சந்தை
அதேபோல் நிஃப்டி குறியீடு 121.55 புள்ளிகள் சரிந்து 7,619.45 புள்ளிகளை அடைந்துள்ளது. ஆசிய சந்தையில் இந்தோனேசியா, மலேசியா, தைவான், ஜப்பான் என அனைத்துச் சந்தைகளும் கடுமையான வீழ்ச்சி அடைந்துள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications