மும்பை: சீன பங்குச்சந்தை தனது வர்த்தகத்தைச் சீர்ப்படுத்த ஆட்டோமேடிங் ஷட்-டவுன் முறையைத் தற்காலிகமாக முடக்கியுள்ளது, அதுமட்டும் அல்லாமல் 4 நாள் தொடர் சரிவைச் சமாளிக்கச் சீன சென்டரல் வங்கி, சீன நாணயமான யுவான் மதிப்பை உயர்த்தும் வகையில் செய்த சில மாறுதல்களின் மூலம் வெள்ளிக்கிழமை வர்த்தகம் உயர்வுடன் முடிந்ததுள்ளது.

வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தில் சீன சந்தையின் லாபகரமான வர்த்தகத்தில், ஐரோப்பா சந்தையும் உயர்வடைந்தது.
இத்தகைய சூழ்நிலையில் இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று முட்டி மோதி 82.50 புள்ளிகள் உயர்ந்து 24,934.33 புள்ளிகளை எட்டிய இந்த வார வர்த்தகம் முடிவடைந்தது.

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் 33.05 புள்ளிகள் உயர்ந்து 7,601.35 புள்ளிகளை அடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் வங்கித்துறை பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தால் எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி ஆகிய வங்கிகள் அதிகளவிலான சரிவை எட்டியுள்ளது. அதேபோல் பார்மா துறையில் சிப்லா மற்றும் லூபின் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை எட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications