மும்பை: செவ்வாய்க்கிழமை ஆசிய சந்தை நிலையான வர்த்தகத்தைக் கொண்டுள்ள போதும் நாட்டின் தொழிற்துறை உற்பத்தி மற்றும் பணவீக்க அறிக்கைகள் இன்று வெளியாகும் காரணத்தால் இன்று மும்பை பங்குச்சந்தை சரிவைச் சந்தித்துள்ளது.
தொழிற்துறை உற்பத்தி மற்றும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்ட முதலீட்டாளர்கள், இன்று பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்யத் துவங்கினர். இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 140 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.

அதுமட்டும் அல்லாமல் நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் வருமான அளவுகளின் கணிப்புகள் இந்நிறுவனப் பங்குகளை மட்டும் அல்லாது இத்துறையின் மீதான வர்த்தகத்தையும் அதிகளவில் குறைத்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 143.01 புள்ளிகள் குறைந்து 24,682.03 புள்ளிகளை எட்டியுள்ளது. அதேபோல் 53.55 புள்ளிகள் சரிந்து 7,510 என்ற மிகக் குறைவான நிலையை அடைந்துள்ளது நிஃப்டி.
இன்று மாலை வெளியாகும் பணவீக்கத்தின் அளவுகள் 5.6 சதவீதம் வரை உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், ரிசர்வ் வங்கி மேலும் வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பில்லை. இதனால் வங்கிகள் மீதான முதலீடும் இன்று குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications