மும்பை: புதன்கிழமை மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் அதிகளவிலான ஏற்ற இறக்கத்தைச் சந்தித்ததால், முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது. வர்த்தகக் குழப்பத்தில் இருந்து தப்பிக்க முதலீட்டாளர்கள் இன்று ப்ளூ சிப் பங்குகள் மீது முதலீட்டை அதிகரித்தனர்.

அதுமட்டும் அல்லாமல் ரிலைலயன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு ஆசிய-ஆப்பிரிக்க-ஐரோப்பிய ஒன் நீர்ழுழ்கி கேபில் திட்டத்தில் இந்தியாவில் இணைப்பை அமைக்க இந்நிறுவனத்திற்குக் கிடைத்த மத்திய அரசின் அனுமதியின் மூலம் 52 வார உயர்வை எட்டியது.
இதனால் ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தின் காரணமாக இந்திய சந்தையில் ஏற்பட்ட சரிவில் இருந்து மும்பை பங்குச்சந்தை மீண்டது.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 172.08 புள்ளிகள் உயர்ந்து 24,854.11 புள்ளிகளை எட்டியது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்று 52.10 புள்ளிகள் உயர்வில் 7,562.40 புள்ளிகளை எட்டியது.


Click it and Unblock the Notifications