மும்பை: வளர்ச்சியில் 25 வருடச் சரிவில் இருக்கும் சீனா சந்தையின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உள்நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் அன்னிய முதலீட்டாளர்கள் இன்று அதிகளவில் இந்திய மற்றும் ஐரோப்பிய சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.
சீன சந்தையின் தாக்கத்தில் இந்திய சந்தையும் பாதிக்கப்படும் என்பதால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைப் பாதுகாத்துக்கொள்ள அதிகளவில் ப்ளூ சிப் பங்குகளில் முதலீடு செய்தனர்.
3 நாள் சரிவு
செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகம் துவங்கும் சில நிமிடங்களில் வர்த்தகமும் முதலீடும் சூடு பிடிக்கத் துவங்கிய நிலையில் 3 நாள் தொடர் சரிவில் இருந்து மும்பை பங்குச்சந்தை மீண்டது.
ஐரோப்பிய சந்தை
இந்நிலையில் இன்று ஐரோப்பிய சந்தையின் பணவீக்கத்தின் அளவு 0.2 சதவீதமாகவும், கட்டுமானத்துறை 18 மாத உயர்வை அடைந்துள்ள நிலையில் ஐரோப்பிய சந்தையில் முதலீடு அதிகரித்துக் காணப்பட்டது.
அதுமட்டும் அல்லாமல் ஐரோப்பிய சந்தையின் நாணய கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதால் இச்சந்தையில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் சீரடைந்து தொடர்ந்து உயர்வில் இருந்தது.
சீன சந்தை
உலகின் 2வது மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் சீனா, 2015ஆம் ஆண்டின் ஜிடிபி வளர்ச்சி யாரும் எதிர்பார்க்காத வகையில் 6.9 சதவீதமாத பதிவாகியுள்ளது.
சென்செக்ஸ்
இத்தகைய சூழ்நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 291.47 புள்ளிகள் சரிவில் 24,479.84 புள்ளிகளை அடைந்தது 3 நாள் தொடர் சரிவில் இருந்து மீண்டது மும்பை பங்குச்சந்தை.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடு 84.10 புள்ளிகள் உயர்வில் 7,435.10 புள்ளிகளை எட்டி செவ்வாய்க்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
நிறுவனங்களின் நிலை
இன்றைய வர்த்தகத்தில் சந்தையின் டாப் 50 நிறுவனங்கள் பட்டியலில் மஹிந்திரா, விப்ரோ, கோல் இந்தியா, ஏசியன் பெயின்ஸ், மாருதி, ஐடிசி, லூபின், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.
ஆதித்யா பிர்லா நூவோ
இந்நிலையில் ஆதித்யா பிர்லா நூவோ நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 15,161 பங்குகளைத் தனது ஊழியர்கள் கணக்கிற்கு அளித்தது. இதன் எதிரொலியாக ஆதித்யா பிர்லா நூவோ நிறுவனங்கள் இன்று ஓரே நாளில் 164.65 புள்ளிகள் உயர்ந்து 2,062.00 புள்ளிகளை எட்டியது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications