மும்பை: பிரதமர் மோடி அலையில் கடந்த சில மாதங்களாக மும்பை பங்குச்சந்தை மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி பொங்க லாபத்தை அளித்தது. ஆனால் தற்போது நிலை முற்றிலும் மாறியுள்ளது.
துணிகளில் சாயம் வெளுப்பது போல் சீன சந்தை வீழ்ச்சி அடைந்த முதல் மும்பை பங்குச்சந்தை தாறுமாறாகச் சரிய துவங்கியுள்ளது. புதன்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 400 புள்ளிகள் சரிந்து 24,000 புள்ளிகளை எட்டி 2014ஆம் ஆண்டை நோக்கிய பயணம் செய்யத் துவங்கியுள்ளது.
ரூபாய் மதிப்பு
புதன்கிழமை வர்த்தகம் துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 பைசா சரிந்து 67.97 ரூபாய் என்ற நிலையில், இந்திய ரூபாய் மதிப்பு 28 மாத சரிவை சந்தித்ததுள்ளது.
சீன சந்தை
இதன் பின் சீன பங்குச்சந்தையும் சரிவுடன் தனது வர்த்தகத்தைத் துவங்கியதால், மும்பை பங்குச்சந்தை உட்பட ஆசிய சந்தையை அனைத்தும் தொடர் சரிவைச் சந்திக்கத் துவங்கியது.
CSI300 குறியீடு
புதன்கிழமை வர்த்தகத்தில் சீன சந்தையின் CSI300 குறியீடு 1.51 தவீதம் சரிந்து 3,174.38 புள்ளிகளை எட்டியுள்ளது, அதேபோல் ஷாங்காய் காம்போசிட் குறியீடும் 1.03 சதவீதம் குறைந்து 2,976.69 புள்ளிகளை அடைந்துள்ளது.
உலகச் சந்தைகள்
இன்றைய வர்த்தக முடிவில் தைவான், சியோல், நியூசிலாந்து, இந்தோனேஷியா போன்ற அனைத்து ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளும் சிரிவுடன் முடிவடைந்தது.
சென்செக்ஸ்
புதன்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 417.80 புள்ளிகள் குறைந்து 24,062.04 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் 125.80 புள்ளிகள் சரிந்து 7,309.30 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications