மும்பை: புதன்கிழமை வர்த்தகம் துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 பைசா சரிந்து 67.94 ரூபாய் என்ற நிலையில், இந்திய ரூபாய் மதிப்பு 28 மாத சரிவை சந்தித்தது.
இதன் பின் சீன பங்குச்சந்தையும் சரிவுடன் தனது வர்த்தகத்தை துவங்கியதால், மும்பை பங்குச்சந்தை உட்பட ஆசிய சந்தைய அனைத்தும் தொடர் சரிவை சந்திக்க துவங்கியது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 475 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்களை பதம் பார்த்தது. இந்நிலையில், மதியம் 12 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 426.03 புள்ளிகள் சரிவில் 24,053.81 புள்ளிகளை அடைந்தது 52 வார சரிவை பதிவு செய்தது.
நிஃப்டி
நிஃப்டி குறியீட்டை பார்க்கும்போது, ரியல் எஸ்டேட், பவர், எண்ணெய் மற்றும் எரிவாயு, மெட்டல், கேபிடல் கூட்டஸ் மற்றும் வங்கி பங்குகளில் அதிகளவிலான சரிவை சந்திதுள்ளதால், பாதி நாள் வர்த்தகத்திலேயே 132 புள்ளிகள் சரிந்து 7,303.10 புள்ளிகளை அடைந்துள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் இந்தியாவின் முக்கிய நிறுவனங்களாக கருதப்படும் ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ், எல் அண்ட் டி, ஹெச்டிஎப்சி மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.
சீன சந்தை
புதன்கிழமை வர்த்தகத்தில் சீன சந்தையின் CSI300 குறியீடு 0.4 சதவீதம் சரிந்து 3,209.89 புள்ளிகளை எட்டியுள்ளது, அதேபோல் ஷாங்காய் காம்போசிட் குறியீடும் 0.4 சதவீதம் குறைந்து 2,996.85 புள்ளிகளை அடைந்துள்ளது.
இதன்பின் ஹாங்காங் பங்குச்சந்தை 1.9 சதவீதம் வரை குறைந்தது குறிப்பிடத்தக்கது.
உலக சந்தைகள்
இன்றைய வர்த்தகத்தில் தைவான், சியோல், நியூசிலாந்து, இந்தோனேஷியா போன்ற அனைத்து ஆசிய சந்தைகளும் சிரிவுடனே துவங்கியுள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications