மும்பை: ஐரோப்பிய சந்தையின் சாதகமான வர்த்தக முடிவுகள் மற்றும் ஆசிய சந்தையின் லாபகரமான வர்த்தக நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 470 புள்ளிகள் வரை உயர்ந்து வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவடைந்துள்ளது.

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று ஆசிய சந்தையில் லாபகரமான வர்த்தகச் சூழ்நிலை அமைந்தது. இதனால் லாபமடைந்த இந்திய பங்குச்சந்தை லாபகரமான நிலையில் இன்றைய வர்த்தகத்தைத் துவங்கியது.
சுமார் 50 புள்ளிகள் உயர்வுடன் துவங்கி இன்றைய வர்த்தகம் ஐரோப்பிய சந்தையின் சாதகமான வர்த்தக முடிவுகள் மூலம் கூடுதல் வலிமை அடைந்து, வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 470 புள்ளிகள் வரை உயர்ந்தது சென்செக்ஸ்.

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 473.45 புள்ளிகள் உயர்ந்து 24,435.66 புள்ளிகளை எட்டியுள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 145.65 புள்ளிகளை உயர்ந்து 7,422.45 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications