600 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. அசத்தலான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை..!

மும்பை: ஆசிய சந்தையின் லாபகரமான வர்த்தகத்தால் இந்திய பங்குச்சந்தை இன்று அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று ஒரே நாளில் 568 புள்ளிகள் உயர்வுடன் ஒரு வாரச் சரிவை சமன் செய்துள்ளது.

திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஜப்பான் நிக்கி 7 சதவீத உயர்வுடனும், ஆசிய சந்தையை 1.56 சதவீத உயர்வுடனும் முடிந்த நிலையில், ஐரோப்பிய சந்தையும் உயர்வுடன் துவங்கி லாபகரமான வர்த்தகத்தைப் பெற்றது, இந்திய சந்தைக்குச் சிறப்பான சூழ்நிலையை உருவாக்கியது.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று யாரும் எதிர்பார்த்திராத வகையில் 600 புள்ளிகள் வரை உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 568 புள்ளிகள் உயர்ந்து 23,554.12 புள்ளிகளை எட்டியுள்ளது.

 

நிஃப்டி

நிஃப்டி

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் வர்த்தகம் துவக்கம் முதல் தொடந்து உயர்வு நிலையிலேயே இருந்து திங்கட்கிழமை வர்த்தகத்தை முடித்துக்கொண்டது.

திங்கட்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 182 புள்ளிகள் உயர்ந்து 7,162.95 புள்ளிகளை அடைந்தது.

 

பாங்க் ஆஃ பரோடா

பாங்க் ஆஃ பரோடா

இன்றைய வர்த்தகத்தில் பாங்க் ஆஃ பரோடாவின் 3வது காலாண்டு முடிவுகளின் மூலம் இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 23 சதவீதம் உயர்ந்து சந்தையைக் கலக்கியது. அதேபோல் சீனாவின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக எஃகு உற்பத்தி குறைந்த நிலையில், இந்தியா ஸ்டீல் நிறுவனங்களின் வர்த்தகம் அதிகரித்துள்ளது.

இதன் எதிரொலியாக டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 13.56 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

 

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

இந்நிலையில் எல் அண்ட் டி, எஸ்பிஐ, அதானி போர்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, கோல் இந்தியா, டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, மஹிந்திரா, மாருதி, ரிலையன்ஸ் போன்ற சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளது.

ரூபாய் மதிப்பு...

ரூபாய் மதிப்பு...

வெள்ளிக்கிழமை நாணய சந்தை முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.23 ரூபாய் என்று உயர்ந்த நிலையில், இன்று 15 உயர்ந்து இந்தியா ரூபாய் வலிமை அடைந்தது.

இன்றைய வர்த்தக முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா உயர்ந்து 68.08 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+