டெல்லி: இந்திய ரயில்வே துறை, ஜப்பான் முதலீட்டுக் கூட்டமைப்புடன் இணைந்து மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில் புல்லட் ரயில் பாதையை அமைக்கவும், அதற்கான ரயில் பெட்டி மற்றும் என்ஜின்களை வடிவமைக்கச் சுமார் 9,800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
இப்புதிய புல்லட் ரயில் மணிக்கு 300-350 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்த முடியும். இத்திட்டத்திற்கான 81 சதவீத தொகையைக் கடனாக JICA எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ஜப்பான் முதலீட்டுக் கூட்டமைப்பு வழங்குகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நகரமாகக் கருதப்படும் மும்பை நகத்தை அகமதாபாத் உடன் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய புல்லட் ரயில் பாதைக்கு மத்திய அரசு அனுமதியுடன் இந்திய ரயில்வே துறை சுமார் 9,800 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கியுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படும் இந்தப் புல்லட் ரயில் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள 9,800 கோடி ரூபாயில் JICA அமைப்பு 81 சதவீத தொகையை 0.1 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் கடனாக அளிக்க உள்ளது. இதற்கான ஒப்புதல்களை மத்திய அரசு மற்றும் ரயில்வே துறை அளித்துள்ளதாக இந்திய ரயில்வே துறையின் நிர்வாகக் குழுத்தலைவர் ஏ.கே.மிட்டல் தெரிவித்துள்ளார். இக்கடன் தொகையை 50 வருடத்திற்குள் திருப்பிச் செலுத்தவும், கூடுதலாக 15 வருடத்திற்கு நீட்டிக்கவும் JICA அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்திற்குத் தேவையான 20 சதவீத பொருட்களை ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யவும், மீதமுள்ள 80 சதவீத பொருட்களை இந்தியாவிலேயே தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில் புல்லட் ரயில் அமைக்கப்பட உள்ள நிலையில், மும்பையில் பந்தரா-குர்லா காம்பிளக்ஸ் பகுதியில் புல்லட் ரயில் நிலையத்தை அமைக்க மிட்டல் தலைமையிலான குழு திட்டமிட்டுள்ளது.
மும்பை - அகமதாபாத் வழித்தடம்..
மேக் இன் இந்தியா
கடன் தொகை
உற்பத்தி
புல்லட் ரயில் நிலையம்


Click it and Unblock the Notifications