டெல்லி: கடந்த ஒரு வருடமாகவே இந்தியாவில் உற்பத்தி அளவுகள் அதிகரித்து வந்தாலும், ஏற்றுமதி அளவுகள் தொடர்ந்து குறைந்து வருகிறது.
உள்நாட்டுத் தேவை அதிகரித்துள்ளதாலும், சர்வதேச சந்தையில் இந்திய தயாரிப்புகளின் விலைகள் அதிகளவில் இருப்பதால், சர்வதேச நாடுகள் பிற நாட்டு தயாரிப்புகளை நாடிச் சென்று வருகிறது. இதுவே ஏற்றுமதி சரிவிற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
14 மாத தொடர் சரிவு..
இந்தியாவில் கடந்த 13 மாதங்களாகத் தொடர்ந்து குறைந்து வந்த ஏற்றுமதி அளவுகள், ஜனவரி மாதத்திலும் சரிந்து சரிவு பாதை 14 மாதங்களாக நீண்டுள்ளது.
வர்த்தகம் சரிவு
டிசம்பர் மாதம் ஏற்றுமதி பொருட்களின் மொத்த மதிப்பு 24.39 பில்லியன் டாலராக இருந்த நிலையில் ஜனவரி மாதத்தில் இதன் அளவு 13.60 சதவீதமாகக் குறைந்து 21.07 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
துறை வாரியான வர்த்தகம்..
பெட்ரோலியம் பொருட்கள், என்ஜினியரிங் பொருட்கள், ஆடைகள், தோல் பொருட்கள், கெமிக்கல், அரிசி மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றின் ஏற்றுமதி அளவுகள் ஜனவரி மாத்தில் அதிகளவில் குறைந்துள்ளது.
இறக்குமதி..
இந்நிலையில் ஜனவரி மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மொத்த அளவுகளின் மதிப்பு 11.01 சதவீதம் குறைந்து 28.71 பில்லியன் டாலராகக் குறைந்து வர்த்தகப் பற்றாக்குறையின் அளவு 7.63 பில்லியன் டாலராகக் குறைந்து நாணய பரிமாற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வலிமை சேர்த்துள்ளது.
தங்க இறக்குமதி
ஜனவரி மாதத்தில் திருமணம் மற்றும் விழாக்காலக் காரணமாக இந்தியாவில் தங்க இறக்குமதி அளவு 85 சதவீகம் அதிகரித்து 2.91 பில்லியன் டாலராக உள்ளது.
பெட்ரோல்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் பொட்ரோலியம் பொருட்களின் மீது நிலவும் மாறுபட்ட விலை நிலைகள் காரணமாக இதன் இறக்குமதி 39 சதவீதம் சரிந்து 5.02 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications