ஏறிய பாணியில் இறங்கியது சென்செக்ஸ்.. ஓரே நாளில் 360 புள்ளிகள் சரிவு..!

மும்பை: இந்தியாவில் ஏற்றுமதி அளவுகள் தொடர்ந்து 14 மாதங்களாகக் குறைந்து வருகிறது, அதிலும் ஜனவரி மாதம் மட்டும் சுமார் 13.60 சதவீதம் சரிந்து 21 பில்லியன் டாலர் அளவு குறைந்தது முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் எதிரொலியாக இன்று மும்பை பங்குச்சந்தையில் இன்று முதலீட்டாளர் ப்ளூ சிப் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்ததால் சென்செக்ஸ் குறியீடு வர்த்தகம் துவக்கம் முதல் தொடர் சரிவைச் சந்தித்தது.

ஏறிய பாணியில் இறங்கியது சென்செக்ஸ்.. ஓரே நாளில் 360 புள்ளிகள் சரிவு..!

செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 362.15 புள்ளிகள் வரை சரிந்து 23,191.97 புள்ளிகளை எட்டியது. இன்றைய வர்த்தகத்தில் பொதுத்துறை வங்கி பங்குகள் அதிகளவிலான வர்த்தகச் சரிவை சந்தித்தது.

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்று அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது. இதன் பிடி நிஃப்டி குறியீடு 114.70 புள்ளிகள் சரிந்து 7,048.25 புள்ளிகளை அடைந்துள்ளது.

இன்று சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் அதானி போர்ட்ஸ், என்டிபிசி, டாக்டர் ரெட்டி மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்கள் மட்டுமே லாபத்தைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்று தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் பங்குச்சந்தை குறித்த வாக்கெடுப்பில் மக்களின் கருத்து இன்று நிஜமாகியது.

ஏறிய பாணியில் இறங்கியது சென்செக்ஸ்.. ஓரே நாளில் 360 புள்ளிகள் சரிவு..!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+