மும்பை: ஆசிய சந்தையின் தாக்கத்தில் மீள முடியாத மும்பை பங்குச்சந்தை புதன்கிழமை காலை வர்த்தகம் முழுவதும் சரிவில் பயணித்தது. ஐரோப்பிய சந்தையின் துணையோடு மதிய வர்த்தகத்தில் லாபத்தில் திளைத்த மும்பை பங்குச்சந்தை இன்று 190 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் முடிந்தது.
இன்றைய வர்த்தகத்தில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், முடிவில் லாபத்துடன் முடிந்தது. இதனால் நாளைய வர்த்தகத் துவக்கமும் லாபகரமான நிலையில் இருக்கும் என நம்பப்படுகிறது.

புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 189.90 புள்ளிகள் உயர்ந்து 23,381.87 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடும் இன்று 60 புள்ளிகள் வரை உயர்ந்து 7,108.45 புள்ளிகளை அடைந்தது.
இன்று மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் ஐசிஐசிஐ வங்கி 3.10 சதவீதம் வரை சரிந்தது. அதேபோல் கோல் இந்தியா, லூபின், சிப்லா, ஆக்சிஸ் வங்கி, விப்ரோ, என்டிபிசி, மஹிந்திரா, எச்டிஎப்சி நிறுவனப் பங்குகளும் சரிந்தது.


Click it and Unblock the Notifications