மும்பை: சிங்கப்பூர் மற்றும் ஆசிய சந்தைகளின் வர்த்தக நிலவரங்களின் படி வெள்ளிக்கிழமை வர்த்தகம் சரிவுடனே துவங்கப்படும் என முன்கூடியே கணிக்கப்பட்ட நிலையில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று சரிவுடனே துவங்கியது.
வாரத்தின் கடைசி வர்த்தக நாள் என்பதாலும், ஆசிய சந்தையில் நிலவிய மந்தமான வர்த்தகக் காரணங்களின் மூலம் இன்றைய வர்த்தகம் மோசமாக இல்லை என்றாலும், குறைவாகவே இருந்தது.
வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் 100 புள்ளிகள் சரிவுடன் துவங்கி, தொடர்ந்து நிலையான வர்த்தகத்தைப் பெற்று லாபகரமான நிலையை எட்டிப் பார்த்து மீண்டும் சரிவை தழுவியது. இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை அதிகளவில் குறைத்துக்கொண்டனர்.
இந்நிலையில் 3 மணியளவில் மத்திய பட்ஜெட் 2016 குறித்து நோமுரா அளித்த சாதகமான தகவல்கள் மூலம் மீண்டும் வர்த்தகம் சூடுப்பிடிக்கத் துவங்கியது. இதனால் இன்றைய வர்த்தகம் லாபத்தில் முடிந்தது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 59.93 புள்ளிகள் உயர்ந்து 23,709.15 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 19 புள்ளிகள் உயர்ந்து 7,210.75 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிந்தது.


Click it and Unblock the Notifications

