முதலீட்டாளர்களை ஈர்க்க தவறியது ரயில்வே பட்ஜெட்.. 110 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..!

மும்பை: 2016-17ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் சந்தை முதலீட்டாளர்களைக் கவர தவறியதால் வியாழக்கிழமை வர்த்தகம் 100 புள்ளிகள் சரிவுடன் முடிந்து தொடர் மூன்று நாள் சரிவிற்கு வழிவகுத்துள்ளது.

இன்று காலை 12 மணி வரையில் மும்பை பங்குச்சந்தை சில ஏற்ற இறக்கங்களுடன் நிலையான வர்த்தகத்தைப் பெற்று வந்தாலும், பட்ஜெட் அறிவிப்பிற்குப் பின் தொடர் சரிவைச் சந்தித்தது.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு தொடர் மூன்று சரிவில் தத்தளிக்கும் நிலையில் வியாழக்கிழமை வர்த்தகத்தில் 112.93 புள்ளிகள் சரிந்து 22,976 புள்ளிகளை எட்டியது.

மேலும் ரயில்வே பட்ஜெட் அறிக்கையை மிகவும் எதிர்பார்த்த முதலீட்டாளர்கள் கவர்ச்சி கரமான திட்டம் ஏதுமில்லாத காரணத்தினால் அதிகளவிலான முதலீட்டைக் குறைத்தனர்.

 

பிப்ரவரி மாத ஆர்டர்கள்

பிப்ரவரி மாத ஆர்டர்கள்

மேலும் இன்று பிப்ரவரி மாதத்திற்கான ஆர்டர்கள் முடிவடைவதால் முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைக் குறைத்தனர். இதன் காரணமாகச் சந்தையில் வர்த்தகத்தின் அளவுகள் பாதிக்கப்பட்டது.

நிஃப்டி

நிஃப்டி

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்று அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது. வியாழக்கிழமை வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 48.10 புள்ளிகள் சரிந்து 6,970.60 புள்ளிகளாகச் சரிந்து 7,000 புள்ளிகள் என்ற நிலையை இழந்தது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

நாணய சந்தையில் இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.72 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.

நிறுவனங்களின் நிலை

நிறுவனங்களின் நிலை

மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஓஎன்ஜிசி, சன் பார்மா, எச்டிஎப்சி, கோல் இந்தியா, ஹிந்துஸ்தான், சிப்லா, பெல், டாடா ஸ்டீல் மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் லாபத்தை எட்டியது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+