3 நாள் சரிவில் இருந்து மீண்டது மும்பை பங்குச்சந்தை.. 180 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!
மும்பை: 2016-17ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்தின் அளவு 7-7.5 சதவீதம் வரை உயரும் என பொருளாதார ஆய்வறிக்கை இன்று தெரிவித்துள்ளது. இந்த வளர்ச்சி 8 சதவீதம் வரையும் உயர வாய்ப்புள்ளதாக இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் வியாழக்கிழமை ரயில்வே பட்ஜெட்டை கவராத முதலீட்டாளர்களை இன்று பொருளாதார ஆய்வறிக்கை கவர்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை வர்த்தகம் துவங்கும் முதலே மும்பை பங்குச்சந்தை நிலையான வர்த்தகத்தைப் பெற்றது. இதனால் சென்செக்ஸ் குறியீடு 178.30 புள்ளிகள் உயர்ந்து 23,154.30 புள்ளிகளை எட்டி லாபகரமான நிலையில் முடிந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் 60 புள்ளிகள் தனது 7,000 புள்ளிகள் என்ற நிலையை மீண்டும் எட்டியது. இன்றைய வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 59.15 புள்ளிகள் உயர்ந்து 7,029.75 புள்ளிகளை எட்டியது.


Click it and Unblock the Notifications