முதலீட்டாளர்களைக் கவராத பட்ஜெட்2016.. தடுமாறிய பங்குச்சந்தையில் சரிவில் முடிந்தது..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, 2016-17ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.

இந்நிலையில் காலை வர்த்தகம் துவக்கம் முதலே சரிவில் தத்தளித்த மும்பை பங்குச்சந்தை, பல ஏற்ற இறக்கங்களுக்குப் பின் சரிவில் முடிந்தது.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

இன்றைய வர்த்தகம் சரிவுடன் துவங்கினாலும், பட்ஜெட் வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் லாபமடையத் துவங்கியது. அதன் பின் மதியம் 12 மணியளவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு யாரும் எதிர்பார்க்காத வகையில் 500 புள்ளிகள் வரை சரிந்தது.

இதன் பின் மீண்டும் லாப நிலைக்குத் திரும்பி 152.30 புள்ளிகள் சரிவில் இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

 

நிஃப்டி

நிஃப்டி

சென்செக்ஸ் குறியீட்டை போல நிஃப்டி குறியீடும் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து 42.70 புள்ளிகள் சரிவில் பிப்ரவரி மாத வர்த்தகம் முடிவடைந்தது.

நிறுவனங்களின் நிலை

நிறுவனங்களின் நிலை

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ், ஐடிசி, லுபின், எஸ்பிஐ, எச்டிஎப்சி, டாக்டர் ரெட்டி, பார்தி ஏர்டெல், எச்டிஎப்சி, கெயில், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் லாபத்தைச் சந்தித்தது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.40 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex Goes For a Wild Ride on Budget Day, Ends Lower

The Sensex ended Budget session's roller coaster ride in the red. The Sensex which swung in the range of nearly 850 points in trades today ended 152 points lower at 23,002 and Nifty declined 43 points to close below its crucial psychological level of 7,000 at 6,987.
Story first published: Monday, February 29, 2016, 17:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X