463.63 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..
மும்பை: இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் பட்ஜெட் தாக்கம் குறையாத காரணத்தினால் இந்திய சந்தையில் முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை அதிகரித்துள்ளனர். ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்புகளின் எதிர்பார்ப்புகளும் பங்குச்சந்தை முதலீட்டு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு நிலையான வர்த்தகத்தை பெற்று 463.63 புள்ளிகள் உயர்ந்து 24,242.98 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடும் 146.55 புள்ளிகள் உயர்ந்து 7,368.85 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் ஏசியன் பெயின்ஸ், டாக்டர் ரெட்டி, பஜாஜ் ஆட்டோ, ஐடிசி, சன் பார்மா, கோல் இந்தியா, மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications