மும்பை: பட்ஜெட் மற்றும் ரிசர்வ் வங்கியின் வட்டிக்குறைப்பின் எதிர்பார்ப்பு ஆகியவற்றின் எதிர்ரொலியாக மும்பை பங்குச்சந்தையைக் கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து உயர்வைச் சந்தித்துள்ளது.
மார்ச் மாதம் துவக்கத்தில் இருந்து, இந்திய பங்குச்சந்தை சிறப்பான வர்த்தகத்தைப் பெற்று 1,604 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது. இத்தகைய உயர்விற்கு ஐரோப்பிய சந்தையின் நிலையான வர்த்தகம் மற்றும் இந்திய சந்தையில் தொர்ந்து உயர்ந்து வரும் அன்னிய முதலீடு ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கிறது.
மும்பை பங்குச்சந்தை
வியாழக்கிழமை வர்த்தகம் துவக்கம் முதலே நிலையான முதலீட்டுடன் சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றது. இதனால் இன்றைய வர்த்தகம் முழுவதும் ஏற்ற இறங்கள் இல்லாமல் 364.01 புள்ளிகள் வரை உயர்ந்து 24,606.99 புள்ளிகளை எட்டியது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டைப் போலவே நிஃப்டி குறியீடும் இன்று நிலையான வர்த்தகத்தைப் பெற்று 7,475.60 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
டாலர் மதிப்பு
இன்றைய நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 67.35 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.
தங்கம் விலை
வியாழக்கிழமை வர்த்தகச் சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏதுமில்லாத காரணத்தால் 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2,950 ரூபாயாகவும், 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2,754 ரூபாயாகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
சென்னையில் இன்று 1 கிலோ பார் வெள்ளியின் விலை 39,156 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications