மும்பை: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நான்கு நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை நிலையான வர்த்தகத்துடன் லாபகரமான நிலையில் வர்த்தகம் செய்யப்பட்டது.
இன்றைய வர்த்தகத்தில் சந்தை சில ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், சென்செக்ஸ் குறியீடு வாரத்தின் கடைசி வர்த்தக நாளிலும் லாபகரமான நிலையில் முடிந்ததுள்ளது.
சென்செக்ஸ்
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சில ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், 39.49 புள்ளிகள் உயர்ந்து 24,646.48 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகம் முடிந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலேவே நிஃப்டி குறியீடும் இன்று பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து9.75 புள்ளிகள் உயர்வுடன் 7,485.35 புள்ளிகள் என்ற உறுதியான இடத்தைப் பிடித்துள்ளது.
டாலர் மதிப்பு
இன்றைய நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 67.18 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.
தங்கம் விலை
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 4 ரூபாய் உயர்ந்து 2,954 ரூபாயாகவும், 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 4 ரூபாய் உயர்ந்து 2,758 ரூபாயாக உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை
இன்று ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 18 ரூபாய் உயர்ந்து 39,164 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications