டெல்லி: பொதுத்துறை வங்கிகளில் நிலவும் வராக்கடன் பிரச்சனையைத் தீர்க்க வங்கிகளை ஒன்றிணைக்க வேண்டும் எனப் பொதுத்துறை வங்கி மற்றும் நிதி நிறுவன தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதன் படி நாட்டில் வராக் கடன் மூலம் மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்து வரும் 27 வங்கி நிறுவனங்களை ஒன்றிணைத்து வெறும் 6 நிறுவனங்களாக ஒருங்கிணைக்க வேண்டும் எனக் கூர்கான் நகரில் நடந்த கியான் சங்கம் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் நிதியமைச்சகத்தின் முக்கியத் தலைவர்கள், வங்கியாளர்கள், ஆர்பிஐ தலைவர்கள் ஆகியோர் கலந்து ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அக்டோபர் 31,2016ஆம் தேதிக்குள் Anchor வங்கிகளான எஸ்பிஐ, பாங்க் ஆஃ பரோடா, பஞ்சாப் நேஷ்னல் வங்கி மற்றும் கனரா வங்கியின் தலைவர்கள் குழுவாக இணைந்து வங்கி ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளும். இக்குழுவிற்கு CAG அமைப்பின் தலைவரான வினோத் ராய் தலைமை வகிப்பார்.
இந்த ஒருங்கிணைப்புப் பிராந்தியம், தொழில்நுட்ப திறன், மனித வளம், வர்த்தகம் திறன் ஆகிய பல காரணிகளைக் கொண்டு ஒருங்கிணைக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications