சரிவிலிருந்து மீண்ட பங்குச் சந்தை... 135 புள்ளிகள் உயர்வில் முடிந்தது!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் அதீத பங்கு விற்பனையால் 200 புள்ளிகள் சரிவில் வர்த்தகம் செய்யப்பட்ட மும்பை பங்குச்சந்தை ரியல் எஸ்டேட் மற்றும் கேபிடல் கூட்ஸ் துறையில் கிடைத்த திடீர் முதலீட்டால் 161 புள்ளிகள் வரை உயர்ந்து லாபத்தில் முடிந்தது புதன்கிழமை வர்த்தகம்.

இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைக் காத்துக்கொள்ளவும், லாப நோக்கில் அதிகளவிலான பங்குகள் விற்பனை செய்யத் துவங்கினர், இதனால் மும்பை பங்குச்சந்தையின் காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 208 புள்ளிகள் வரை சரிந்தது.

சரிவிலிருந்து மீண்ட பங்குச் சந்தை... 135 புள்ளிகள் உயர்வில் முடிந்தது!

புதன்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் சாதகமான நிலையின் காரணமாக 134.73 புள்ளிகள் உயர்ந்து 24,793.96 புள்ளிகளை எட்டியது.

நிஃப்டி குறியீடும் இன்று மந்தமான வர்த்தகத்தில் இருந்து மீண்டு 46.50 புள்ளிகள் உயர்ந்து 7,531.80 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex makes smart recovery to log 135-point gain

The domestic stock market staged an impressive comeback that helped the S&P BSE Sensex rally from a 208-point loss to log 161-point gain at 24,820 on Wednesday, thanks to a bounce in realty and capital goods stocks.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X