மும்பை: கடந்த 3 நாட்களாக மும்பை பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வருவதால் வர்த்தகத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று ஆசிய சந்தையில் நிலவிய லாபகரமான சூழ்நிலைகள் மூலம் மும்பை பங்குச்சந்தை இன்று 96 புள்ளிகள் உயர்வில் லாபகரமான நிலையை அடைந்தது.

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 94.65 புள்ளிகள் உயர்ந்து 24,717.99 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 24.05 புள்ளிகள் உயர்வில் 7,500 புள்ளிகள் என்ற சிறப்பான நிலையைத் தாண்டி 7,510.20 புள்ளிகளை எட்டிய இந்த வார வர்த்தகம் முடிந்தது.
இன்றைய வர்த்தகத்தில் பார்மா துறை நிறுவனங்கள் அதிகளவிலான லாபத்தை அடைந்துள்ள குறிப்பிடத்தக்கது.
இன்று நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 67.06 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications