6 வார உயர்வில் மும்பை பங்குச்சந்தை.. 7,500 புள்ளிகளைத் தாண்டிய நிஃப்டி..!
மும்பை: தொடர்ந்து 2 நாள் உயர்வில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 6 வார உயர்வை எட்டியுள்ளது. வாரத்தின் முதல் வர்த்தக நாளில் நாட்டின் தொழிற்துறை உற்பத்தி, மொத்த விலை குறியீடு மற்றும் நிலையான அன்னிய முதலீடு ஆகியவற்றின் காரணமாக மும்பை பங்கச்சந்தை இன்று கணிசமான வர்த்தகத்தை மட்டுமே பெற்றது.

மேலும் சர்வதேச சந்தையில் பாங்க் ஆஃப் ஜப்பான் இன் கொள்கை மறுஆய்வு காரணமாக அமெரிக்கச் சந்தை மந்தமாகச் செயல்பட்டு வருகிறது குறிப்பிட்டு வருகிறது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 86.29 புள்ளிகள் உயர்வில் 24,804.28 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடும் 28 புள்ளிகள் உயர்ந்து 7,538.75 புள்ளிகள் என்ற நிலையை அடைந்தது.
இதனால் இன்று நிஃப்டி குறியீடு 7,500 புள்ளிகள் என்ற ஸ்திரமான வர்த்தக நிலையை அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications