மும்பை: வல்லரசு நாடுகள் மற்றும் முக்கியப் பொருளாதார நாடுகள் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள ஜப்பான், 2016ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என அந்நாட்டு வளர்ச்சி ஆய்வறிக்கை கூறியுள்ளது.
இதன் எதிரொலியாக ஆசிய சந்தை அதிகளவில் பாதித்து, இந்திய சந்தையைக் கவிழ்த்தது.
திங்கட்கிழமை வர்த்தகம் 86 புள்ளிகள் சரிவில் முடிந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வர்த்தகம் லாபகரமாக இருக்கும் என நம்பப்பட்டது. ஆனால் இன்று வர்த்தகம் துவங்கும் முதலே சரிவுடன் துவங்கி முதலீட்டாளர்களைக் கவலையில் ஆழ்த்தியது.

செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 253.11 புள்ளிகள் சரிந்து 24,551.17 புள்ளிகளை எட்டியது, அதேபோல் நிஃப்டி குறியீடு 78.15 புள்ளிகள் சரிந்து 7,460.60 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் சந்தையில் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் எஸ்பிஐ, டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி, பெல், ரிலையன்ஸ் , மாருதி போன்ற நிறுவனங்கள் கணிசமான லாபத்தைச் சந்தித்தது.
மத்திய அரசு மருந்து பொருட்களின் மீது விதிக்கப்பட்ட தடையின் காரணமாகப் பார்மா துறையில் அதிகளவிலான முதலீடு குறைந்து இத்துறை நிறுவனங்களை மிகப்பெரிய சரிவிற்குத் தள்ளியது.


Click it and Unblock the Notifications
