மும்பை: இந்திய சந்தையில் ஏற்றுமதியின் தொடர் சரிவின் காரணமாக மும்பை பங்குச்சந்தையின் காலை வர்த்தகத்தில் 120 புள்ளிகள் வரை சரிந்தது. ஆனால் மதிய நேர வர்த்தகத்தில் சுகாதாரத் துறை நிறுவனங்களான லூப்பின் மற்றும் சிப்லா நிறுவனப் பங்குகள் திடீரென உயர்ந்தது சந்தைக்குச் சாதகமாக அமைந்தது.
அதேபோல் சர்வதேச சந்தைகளின் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை இந்திய சந்தையில் உயர்ந்துள்ளது, இதன் காரணமாக வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் முதலீடு அதிகரித்துக் காணப்பட்டது.

இதன் எதிரொலியாகச் சரிவில் தத்தளித்த மும்பை பங்குச்சந்தை 131.31 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்படுகிறது.
புதன்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 131.31 புள்ளிகள் உயர்வில் 24,682.48 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடும் மாலை நேர வர்த்தகத்தில் 38.15 புள்ளிகள் உயர்ந்து 7,498.75 புள்ளிகளை அடைந்தது.


Click it and Unblock the Notifications