வரி ஏய்ப்பாளர்களை அதிகம் கொண்ட மாநிலமாக "திகழும்" மகாராஷ்டிரா
2002ஆம் ஆண்டு வரி ஏய்ப்பாளர்களிடம் சிக்கிய வங்கி கடன்கள் ரூ6,291 கோடியாக இருந்தது. கடந்த 13 ஆண்டுகளில் இது ரூ56,521 கோடியாக அதிகரித்துள்ளது.
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் வரி ஏய்ப்பாளர்கள் அதிகம் உள்ள மாநிலமாக 'திகழ்வது' மகாராஷ்டிராதான். அம்மாநிலத்தில் 1,138 தொழிலதிபர்கள் வங்கிக் கடன்களை திருப்பி செலுத்தாதவர்கள். அவர்கள் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு தெரியுமா? ரூ21,647 கோடி.

வரி ஏய்ப்பாளர்கள் அதிகம் கொண்ட மாநிலத்தில் 2-வது இடம் மேற்கு வங்கத்துக்கு... அம்மாநிலத்தில் 710 வரி ஏய்ப்பாளர்கள் இருக்கின்றனர்.
இதில் 567 வரி ஏய்ப்பாளர்களுடன் 3-வது இடத்தில் இருக்கிறது ஆந்திரா.
டெல்லி மாநிலத்தில் வரி ஏய்ப்பாளர்களிடம் சிக்கிய வங்கிக் கடன்கள் ரூ7,299 கோடிக்கும் அதிகம்....


Click it and Unblock the Notifications