அமெரிக்காவால் இந்திய சந்தைக்கு லாபம்.. 440 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!
மும்பை: செவ்வாய்க்கிழமை வர்த்தகம் மந்தமாக முடிந்த நிலையில், அமெரிக்கப் பெடரல் வங்கியின் தலைவர் ஜெனெட் யெலன் வட்டி உயர்த்தப்பட்டால் பொருளாதார வளர்ச்சிக்கு ஆபத்து விளையும் எனத் தெரிவித்தார்.
இதன் எதிரொலியாக ஆசிய சந்தை இன்று வர்த்தகத்திலும் லாபத்திலும் துள்ளிக் குதித்தது.

புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் இன்று துவக்கம் முதலதே தொடர் உயர்வைச் சந்தித்தது. இதனால் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 438.12 புள்ளிகள் உயர்ந்து 25,338.58 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் ப்ளூ சிப் பங்குகளின் மீதான அதீத முதலீட்டால் 138.20 புள்ளிகள் உயர்ந்து 7,735.20 புள்ளிகள் எட்டிய இன்றைய வர்த்தகம் முடிந்தது.


Click it and Unblock the Notifications