மும்பை: ஏப்ரல் 5ஆம் தேதி நடக்க உள்ள ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய மறுஆய்வுக் கொள்கையில் வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடனின் வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை 0.25% வரை குறைக்க வாய்ப்புள்ளதைத் தொடர்ந்து. முதலீட்டாளர்கள் இன்று வங்கி மற்றும் முதலீட்டுத் துறை சார்ந்த நிறுவனங்களில் அதிகளவில் முதலீடு செய்தனர்.
இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை இன்று 130 புள்ளிகள் உயர்வுடன் லாபகரமான நிலையில் வர்த்தகம் முடிவடைந்தது.

வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு வர்த்தகம் லாபகரமான நிலையில் துங்கினாலும் ஐரோப்பிய சந்தையின் தாக்கல் சில புள்ளிகளை இழந்து மீண்டும் லாப நிலையை அடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 130 புள்ளிகள் உயர்ந்து 25,399.65 புள்ளிகளை அடைந்தது, இதேபோல் நிஃப்டி குறியீடு 45.75 புள்ளிகள் உயர்ந்து 7,758.80 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications